ஷா ஆலாம், ஆகஸ்ட்.05-
போர்ட்டிக்சனின் உள்ள ஒரு சீனப்பள்ளியில் தேசியக் கொடியைத் தலைக்கீழாக பறக்க விட்ட சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலே கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜாலோர் கெமிலாங் கொடியைக் கட்டியவர், ஒரு மாற்றுத் திறனாளி என்று கூறப்பட்டாலும் கடும் நடவடிக்கை அவசியமாகும் என்று வலியுறுத்தினார்.
தேசியக் கொடியைக் கட்டுவதற்கானப் பணி, எதற்காக ஒரு மாற்றுத் திறனாளியிடம் ஒப்படைக்கப்பட்டது என்பதே தனது கேள்வியாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
இது அரசியல் விவகாரம் அல்ல. நாட்டின் தேசப்பக்தி சார்ந்த விவகாரமாகும். இதில் விட்டுக்கொடுக்கும் போக்கு அறவே கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
இதனிடையே சம்பந்தப்பட்ட பள்ளி மன்னிப்புக் கோரியதால் அந்த மன்னிப்பை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கல்வியாளர் தஜுடின் ரஸ்டி கேட்டுக்கொண்டுள்ளார்.








