கோலாலம்பூர், ஜூலை.22-
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அண்மையில் மேற்கொண்ட பிரான்ஸ் நாட்டுப் பயணம், இன்று மக்களவையில் பேசும் பொருளாக மாறியது.
அன்வார் மேற்கொண்ட பிரான்ஸ் பயணம் அதிகாரப்பூர்வமானதா அல்லது அதிகாரப்பூர்வமற்றதா என்று எதிர்க்கட்சியினர் சுமார் 2 மணி நேரம் கேள்விக் கணைகளால் துளைத்தனர்.
பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில் அதிகாரப்பூர்வமற்ற பயணமும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பெலுரான் எம்.பி. ரொனால்ட் கியாண்டி குற்றஞ்சாட்டினார்.
அதற்கு பதில் அளித்த வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான், பிரதமர் மேற்கொண்ட அந்தப் பயணம் அதிகாரப்பூர்வமற்ற பயணம் அல்ல என்பதைத் தெளிவுபடுத்தினார்.








