ஷா ஆலாம், அக்டோபர்.05-
மலேசியாவில் நடைபெறவுள்ள 47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்கு அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்பை அழைத்திருப்பதை உடனடியாக இரத்து செய்ய வேண்டும் என்று பாச்சோக் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் ஷாஹிர் சே சுலைமான் வலியுறுத்தியுள்ளார். பாலஸ்தீனத்தில் நிலம், உயிர், அம்மக்களின் மரியாதையைப் பறித்து, போர்க் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் ஒரு காலனியாதிக்கவாதியை இந்தக் கூட்டத்திற்கு அழைப்பது தவறு என்று அவர் ஆவேசமாகக் கூறியுள்ளார்.
இந்த அழைப்புக்குத் தீர்மானமான எதிர்ப்பு தெரிவித்து, உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார். இந்தப் பிரச்சினையைத் நாளை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.








