May 21, 2026
Thisaigal NewsYouTube
அடுத்த வாரம் குற்றச்சாட்டப்பட உள்ள டாயிம்
தற்போதைய செய்திகள்

அடுத்த வாரம் குற்றச்சாட்டப்பட உள்ள டாயிம்

Share:

முன்னாள் நிதியமைச்சர் Tun Daim Zainuddin. அடுத்த வாரம் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட உள்ளார்.

ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த Tun Daim , இன்று வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் அடுத்த வாரம் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட உள்ளார்.

இது குறித்து தகவல் அளித்த மலேசிய லஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் தலைவர் Tan Sri Azam Baki தெரிவிக்கயில், டாயிமின் வழக்கறிஞர், டாயிமுடைய சமீபத்திய நிலைமையைத் தெரிவிக்க அதிகாரத்துவத்தினரைத் தொடர்பு கொண்டு விட்டதாகக் குறிப்பிட்டார்.

முன்னதாகவே எம்ஏசிசி சட்டப்படி, டாயிம் நீதிமன்றத்தில் குற்றச் சாட்டப் பட்டிருக்க வேண்டும். ஆனால் அவரது உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் இந்தத் தாமன் ஏற்பட்டதாக அஸாம் பாக்கி சொன்னார்.

Related News

அடுத்த வாரம் குற்றச்சாட்டப்பட உள்ள டாயிம் | Thisaigal News