Sep 25, 2026
Thisaigal NewsYouTube
பக்காத்தான் - பெர்சத்து கூட்டணிக்கு வாய்ப்பில்லை: பிரதமர் அன்வார் திட்டவட்டம்
தற்போதைய செய்திகள்

பக்காத்தான் - பெர்சத்து கூட்டணிக்கு வாய்ப்பில்லை: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

Share:

பெர்சத்து கட்சி மீண்டும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் இணையக்கூடும் என்ற யூகங்களைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நிராகரித்துள்ளார். அரசியல் கட்சிகள் "விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் திருமணம் செய்துகொள்வது போன்ற" அணுகுமுறையில் தங்களுக்கு நம்பிக்கையில்லை என்று பிரதமர் கூறியுள்ளார்.

ஜப்பானுக்கான தனது அதிகாரப்பூர்வ பயணத்தின் இறுதியில் செய்தியாளர்களிடம் பேசிய பக்காத்தான் தலைவரான அன்வார், தற்போதைய கூட்டரசு அரசாங்கம் மிகவும் நிலையாக உள்ளதாகவும், தற்போதைய கூட்டணிக் கட்சிகளுக்குத் துரோகம் விளைவிக்கும் எந்தவொரு செயலிலும் தாம் ஈடுபட விரும்பவில்லை என்றும் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.

பாஸ் கட்சியுடனான உறவு முறிந்ததைத் தொடர்ந்து பெர்சத்து கட்சி, பக்காத்தான் கூட்டணியுடன் இணையலாம் என்ற ஊகங்களுக்கு மத்தியில் பிரதமரின் இந்த விளக்கம் வெளிவந்துள்ளது.

Related News