Jul 27, 2026
Thisaigal NewsYouTube
சுலங்கூர் சுற்றுலாத்துறை வெள்ளி விழாவைக் கொண்டாடும் வகையில் 2026 சுலங்கூர் சுற்றுலாப் பயணக் கண்காட்சி கோலாகலமாகத் தொடக்கம்
தற்போதைய செய்திகள்

சுலங்கூர் சுற்றுலாத்துறை வெள்ளி விழாவைக் கொண்டாடும் வகையில் 2026 சுலங்கூர் சுற்றுலாப் பயணக் கண்காட்சி கோலாகலமாகத் தொடக்கம்

Share:

மலேசியாவின் முன்னணி சுற்றுலாத் தலமாக சுலங்கூர் மாநிலத்தை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, கோலாலம்பூர் பசார் செனியில் கடந்த ஜூலை 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் 2026 சுலங்கூர் சுற்றுலாப் பயணக் கண்காட்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 2026 சுலங்கூர் வருகை ஆண்டு பிரச்சாரத்திற்கு வலு சேர்க்கும் வகையில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் 50,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்துகொண்டனர். மேலும், இதன் மூலம் 150,000 ரிங்கிட்டிற்கும் அதிகமான விற்பனை ஈட்டப்பட்டு, மாநிலத்தின் சுற்றுலாப் பொருளாதார வளர்ச்சிக்கு இது ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

சுற்றுலாப் பயணிகள் மற்றும் தொழில்துறை பங்காளர்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கும் தளமாக விளங்கிய இந்தக் கண்காட்சியில், தோராயமாக 40 சுற்றுலாப் பந்தகர்கள் கலந்துகொண்டு தங்களின் சேவைகளை அறிமுகப்படுத்தினர். தொடக்க விழாவில் உரையாற்றிய சுலங்கூர் மாநில ஊராட்சி மற்றும் சுற்றுலாத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ங் சூ லீம் , 2026 சுலங்கூர் வருகை ஆண்டில் ஒன்பது மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இலக்கை அடைய இத்தகைய முன்னெடுப்புகள் பெரிதும் உதவும் என்று வலியுறுத்தினார்.

இதேவேளையில், தனது 25 ஆண்டுகால வெள்ளி விழாவைக் கொண்டாடும் டூரிசம் சிலாங்கூர் நிறுவனம், "சில்வர் இன் மோஷன்" என்ற கருப்பொருளுடன் சுற்றுலாச் சூழலை மேலும் நிலையானதாகவும் புதுமையானதாகவும் மாற்றுவதில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. கோலாலம்பூர் பசார் செனியில் நடைபெற்ற இந்நிகழ்வில், பல கலாச்சார நிகழ்ச்சிகள், உள்ளூர் கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் மற்றும் புதிய "சர்ப்ரைசிங் சிலாங்கூர் கான் இடா" பாடல் மற்றும் இசை காணொளி வெளியீடு போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றன.

Related News

சுலங்கூர் சுற்றுலாத்துறை வெள்ளி விழாவைக் கொண்டாடும் வகையி... | Thisaigal News