Jul 31, 2026
Thisaigal NewsYouTube
ஆசிரியை கொலை/ முன்னாள் காதலன் கைது
தற்போதைய செய்திகள்

ஆசிரியை கொலை/ முன்னாள் காதலன் கைது

Share:

ஜோகூர், ஆகஸ்ட் 12-

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காணாமல் போன நிலையில் தலையின்றி மிக கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் மலாக்கா, அலோர் காஜாவில் உடல் கண்டு பிடிக்கப்பட்ட ஜோகூர், கோட்டா மசாய் 3, பாசிர் குடாங், - கைச் சேர்ந்த ஆசிரியை கொலை தொடர்பில் அவரின் முன்னாள் காதலனும், பல்கலைக்கழகத்தில் ஒன்றாக படித்தவருான முன்னாள் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Forex நாணய பரிமாற்றம் தொடர்பில் மூன்று குழந்தைகளுக்கு தாயாரான அந்த 37 வயது பெண் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அலோர்காஜா மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் அஷாரி அபு சாமா தெரிவித்தார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி வீடு திரும்பாமல் போன அந்த ஆசிரியையின் கால்கள், கைகள் இல்லாத, தலையில்லா உடல் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி,கம்போங் தஞ்சூங் ரிமாவ், புலாவ் செபாங் அலோர் கஜா, மலாக்கா- வில் ஒரு கால்வாயில் கண்டு பிடிக்கப்பட்டது. அது காணாமல் போன ஆசிரியை இஸ்திகோமா அஹ்மத் ரோஸி- என்பவருடையது, / என ஜனவரி 6 ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது.

இக்கொலை தொடர்பில் கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி பேராக், கெமோர்- ரில் ஒரு தம்பதியர் கைது செய்யப்பட்டனர்.

இந்த கைது நடவடிக்கையைத் தொடர்ந்து ஆசிரியையின் உடல் மீட்கப்பட்ட இடத்திலிருந்து 5,6 கிலோ மீட்டர் தொலைவில் அந்தப் பெண்ணின் கைவிரல்கள் எலும்புகள் மீட்கப்பட்டன.

கைது செய்யப்பட்டுள்ள அந்த ஆசிரியையின் முன்னாள் காதலன், விசாரணைக்கு ஏதுவாக தடுப்புக்காவல் அனுமதி, மேலும் நான்கு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அஷாரி அபு சாமா தெரிவித்தார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை