Oct 10, 2026
Thisaigal NewsYouTube

நஜீப் விடுவிப்பு, பிரதமர் கருத்துரைக்க மறுப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நஜீப் விடுவிப்பு, பிரதமர் கருத்துரைக்க மறுப்பு

பூச்சோங், ஜூன்.20-

எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் தொடர்புடைய சட்டவிரோதப் பணமாற்றம் தொடர்பான வழக்கில் டத்தோஸ்ரீ நஜீப் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டு இருப்பது குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கருத்துரைக்க மறுத்து விட்டார்.

இது நீதிபரிபாலனம் தொடர்புடைய விவகாரம் என்பதால் தாம் கருத்துரைப்பது முறையாகாது என்று பிரதமர் விளக்கம் அளித்தார்.

இது முழுக்க நீதிமன்றம் மற்றும் சட்டத்துறை சம்பந்தப்பட்ட விவகாரமாகும் என்று இன்று பூச்சோங்கில் வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →