வாகனமோட்டும் லைசென்ஸ் சோதனையில் மாணவர்களிடம் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் மூன்று பெண்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் கைது செய்துள்ளது. கணினி தேர்வில் அமரவிருந்த அந்த வாகனமோட்டும் பயிற்சி மாணவர்களை கட்டாயமாக தேர்ச்சி அடைய செய்வதாக கூறி லஞ்சம் பெற்றதாக அந்தப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளன..
அந்த மூன்று பெண்களில் இருவர், ஜோகூர், கோத்தா திங்கியில் அரசாங்க இலாகாவுடன் தொடர்புடைய வாடிக்கையாளர்கள் சேவைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர். மற்ற ஒருவர் வாகனமோட்டு பயிற்சி மையத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
23 க்கும் 34 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த மூவரும் நேற்று இரவு 9 மணியளவில் ஜோகூர் மாநில எஸ்.பி.ஆர்.எம் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். .








