Jul 31, 2026
Thisaigal NewsYouTube
அறிக்கை சமர்ப்பிக்குமாறு பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவு
தற்போதைய செய்திகள்

அறிக்கை சமர்ப்பிக்குமாறு பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவு

Share:

பள்ளியில் பகடிவதையை தாங்கிக் கொள்ள முடியாமல், பள்ளியை விட்டு ஓடிவிட்டதாக கூறப்படும் இரண்டாம் படிவம் பயிலும் மாணவர் சம்பந்தப்பட்ட கோலாலம்பூர், செராஸ், தங்கும் வசதியை கொண்ட ஓர் இடைப்பள்ளி, இச்சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தெரிவித்துள்ளார்.

பள்ளி நிர்வாகத்திலிருந்து முழு அறிக்கை கிடைத்தப்பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கையை கல்வி அமைச்சினால் எடுக்க இயலும். அதற்கு முன்னதாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு, ஓர் அறிக்கையை சமர்ப்பிக்கும்படி பள்ளி நிர்வாகத்தை கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளதாகலிம் ஹுய் யிங் குறிப்பிட்டார்.

பள்ளிகளில் பகடிவதை சம்பவங்கள் நிகழ்வதை கல்வி அமைச்சு கடுமையாக கருதுவதாக துணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related News