Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மூடாவும் பிஎஸ்எம். கட்சியும் பேச்சு நடத்த முடிவு
தற்போதைய செய்திகள்

மூடாவும் பிஎஸ்எம். கட்சியும் பேச்சு நடத்த முடிவு

Share:

வரும் சட்டமன்றத் தேர்தலில் அரசியல் ஒத்துழைப்பு கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மூடா கட்சியும், பிஎஸ்எம் எனப்படும் மலேசிய சோசலிச கட்சியும் இணக்கம் தெரிவித்துள்ளன.
மூடா கட்சிக்கும், பிஎஸ்எம் கட்சிக்கும் இடையிலான தொடர்புமுறைகள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான ஒற்றுமையை கொண்டு இருப்பதால் இரு கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன என்று மூடா கட்யின் தலைவர் சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
இரு கட்சிகளும் ஒத்துழைப்பு கொள்வதற்கு முன்னதாக முதலில் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்மாணிக்கலாம் என்ற அடிப்படையில்தான் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இன்று கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் சையிட் சாடிக் மேற்கண்டவாறு கூறினார்.

Related News