Dec 4, 2025
Thisaigal NewsYouTube
5 கோடி வெள்ளியை இழப்பீடாக பெற்றுத் தந்துள்ளது
தற்போதைய செய்திகள்

5 கோடி வெள்ளியை இழப்பீடாக பெற்றுத் தந்துள்ளது

Share:

தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், கடந்த 20 ஆண்டு கால கட்டத்தில் சுமார் 5 கோடி வெள்ளியை தோட்டத் தொழிலாளர்களுக்கு காப்புறுதி திட்டத்தின் வாயிலாக இழப்பீடாக பெற்றுத் தந்துள்ளதாக தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் டத்தோ ஜி.சங்கரன் தெரிவித்தார்.

 தற்போது தோட்டங்களில் வேலை செய்யும் உள்நாட்டு மற்றும் அன்னிய தொழிலாளர்கள் கிரேட் ஈஸ்டெர்ன் காப்புறுதி திட்டத்தின் வாயிலாக கூடுதல் நன்மை பெறும் வகையில் காப்புறுதித் திட்டம் எற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

இன்று பெட்டாலிங் ஜெயாவில் உள்ள தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க தலைமையகத்தில் நடைபெற்ற மாநில உத்தியோகஸ்தர்களுக்கான விளக்கமளிப்பு கூட்டத்தில் டத்தோ ஜி. சங்கரன் இதனை தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு காப்புறுதி பாதுகாப்பு சலுகையை வழங்கும் வகையில் ஒவ்வொரு தொழிலாளருக்கும் மாதம் ஒன்றுக்கு 10 வெள்ளி செலுத்தப்படுவதாகவும், தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் இந்த அனுகூலத்தை சங்க உத்தியோகஸ்தர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். 

இந்நிகழ்வில் கடந்த மூன்று மாத கால கட்டத்தில் வேலையின் போது விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு 6 லட்சத்து 17 ஆயிரம் வெள்ளி இழப்பீட்டுக்குரிய காசோலையை காப்புறுதி அதிகாரி காளிதாஸிடமிருந்து டத்தோ ஜி.சங்கரன் பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வில் சங்கத்தின் நிர்வாக செயலாளர் ஏ. நவமுந்தன், தேசிய தலைவர் எம்.தனபாலன், நிதி நிர்வாக செயலாளர் நெமிநாதன், மாநில செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Related News