Oct 14, 2026
Thisaigal NewsYouTube

பாஸ் உறுப்பினரைச் சாடினார் அமைச்சர் ஃபாமி

திசைகள் செய்திப்பிரிவு
Share:

கோலாலம்பூர், பிப்.19-

நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட இனப்பாகுபாடு எதிர்ப்புச் சட்ட தீர்மானம், இனக் கலவரங்களுக்கு வழிவகுக்கும் என்ற எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கூற்றுக்கு அரசாங்கப் பேச்சாளர் ஃபாமி ஃபாட்சீல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாஸ் கட்சியை சேர்ந்த அகமட் மர்சுக் ஷாரியின் இந்தக் கூற்று, ஆத்திரமூட்டும் வகையில் இருப்பதாக ஃபாமி குறிப்பிட்டார்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர், அதிக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டுமே தவிர இன உணர்வுகளை ஆதரிப்பவராகவோ அல்லது பிரச்னையை உண்டு பண்ணக்கூடியவராகவோ இருக்கக்கூடாது என்று தொடர்புத்துறை அமைச்சருமான ஃபாமி தெரிவித்தார்.

மலேசியர்கள் மத்தியில் அச்சத்தை தூண்டி விடுவதற்கு பதிலாக ஒற்றுமையாக வளர்க்கக்கூடியவராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் விளங்கிட வேண்டும் என்று ஃபாமி வலியுறுத்தினார்.

டிஏபி தலைவர் லிம் குவான் எங் முன்மொழிந்துள்ள இனப்பாகுபாடு எதிர்ப்புச் சட்ட தீர்மானமானது, நாட்டில் கடந்த 1969 ஆம் ஆண்டு நிகழ்ந்த மே 13 கலவரத்தைப் போல மீண்டும் நிகழ்வதற்கு வழி வகுக்கும் என்று பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அகமட் மர்சுக் கூறியது தொடர்பில், அவரை ஃபாமி சாடினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கூடுதல் கல்விப் பயிற்சி! – துணைக் கல்வி அமைச்சர்

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கூடுதல் கல்விப் பயிற்சி! – துணைக் கல்வி அமைச்சர்

ஊழல் செய்பவர்கள்தான் பதவி விலக வேண்டும்; நல்ல தலைவர்களைப் பாதுகாக்க வேண்டும்!’ – அந்தோணி லோக்கிற்கு அன்வார் பகிரங்க ஆதரவு

ஊழல் செய்பவர்கள்தான் பதவி விலக வேண்டும்; நல்ல தலைவர்களைப் பாதுகாக்க வேண்டும்!’ – அந்தோணி லோக்கிற்கு அன்வார் பகிரங்க ஆதரவு

தீபாவளிக்கு முன்பாக 50,000க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு ரிங்கிட் 1,000 உதவி! அந்தோணி லோக் உறுதி

தீபாவளிக்கு முன்பாக 50,000க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு ரிங்கிட் 1,000 உதவி! அந்தோணி லோக் உறுதி

8,690 மாணவர்களின் தமிழ்மொழித் திறனை மேம்படுத்த மித்ரா 9 லட்சம் ரிங்கிட்டுக்கு மேல் நிதி ஒதுக்கீடு

8,690 மாணவர்களின் தமிழ்மொழித் திறனை மேம்படுத்த மித்ரா 9 லட்சம் ரிங்கிட்டுக்கு மேல் நிதி ஒதுக்கீடு

1எம்டிபி வழக்கில் நஜிப்புக்கு மீண்டும் பின்னடைவு! 15 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு

1எம்டிபி வழக்கில் நஜிப்புக்கு மீண்டும் பின்னடைவு! 15 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு

கல்வியில் பின்தங்கிய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கத் தொழில்திறன் பயிற்சி! பேராக் அரசு ஆதரவு – டத்தோ சிவநேசன்

கல்வியில் பின்தங்கிய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கத் தொழில்திறன் பயிற்சி! பேராக் அரசு ஆதரவு – டத்தோ சிவநேசன்