ஜோகூர் பாரு, ஆகஸ்ட்.27-
நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளிலிருந்து பெட்ரோலைத் திருடியதாக பாகிஸ்தான் ஆடவர் ஒருவர், ஜோகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
38 வயது டிலாவார் கான் என்ற அந்த பாகிஸ்தான் ஆடவர், மாஜிஸ்திரேட் அதிஃபா ஹஸிமான் வாஹாப் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி காலை 7.30 மணியளவில் ஜோகூர், இஸ்கண்டார் புத்ரி, ஃபோரஸ்ட் சிட்டியில் கார் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளிலிருந்து 2.5 லிட்டர் பெட்றோலைத் திருடியதாக அந்த பாகிஸ்தான் ஆடவருக்கு எதிராகக் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.
எனினும் அந்த அந்நிய ஆடவர் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளார். உள்ளூரைச் சேர்ந்த இரண்டு நபர்களின் உத்தரவாதத்துடன் அந்த நபரை 5 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்க மாஜிஸ்திரேட் அதிஃபா ஹஸிமான் அனுமதி அளித்தார்.








