நாளை ஏப்ரல் 14 ஆம் தேதி பிறக்கவிருக்கும் சித்திரைப் புத்தாண்டை மலேசிய மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுவதுடன், குடும்பங்கள் ஒற்றுமையாகவும் இறை வழிபாட்டுடனும் இந்த புத்தாண்டை வரவேற்க வேண்டும் என்று கோலாலம்பூர், ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ ஆர். நடராஜா தமது சித்திரை புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இந்த நன்னாளில் ஆலயங்களுக்குச் செல்வதை மக்கள் தவற விடக்கூடாது. மேலும் நமது கலை, கலாச்சாரம், பாரம்பரியம், மரபு ஆகியவற்றை கட்டிக்காக்கும் அதேவேளையில் மலேசிய இந்தியர்களின் ஒற்றுமை, மேலும் வலுப்பட வேண்டும் என்று டான்ஸ்ரீ நடராஜா தமது வாழ்த்துச் செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

வீட்டுக் காவலுக்கு மத்தியில் நஜிப்புக்கு புதிய சோதனை: ஜனவரி 7-அம் தேதி வெளியாகப் போகும் அப்பீல் நீதிமன்ற தீர்ப்பு

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு

உறவினர் வெறிச்செயல்: 5 வயது சிறுமி ஆற்றில் வீசப்பட்டு உயிரிழப்பு

கூச்சிங்கில் 24 மணி நேர கடைகள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு


