Dec 4, 2025
Thisaigal NewsYouTube
போலீஸ் துறை அதிரடிச் சோதனை: 288 பேர் கைது
தற்போதைய செய்திகள்

போலீஸ் துறை அதிரடிச் சோதனை: 288 பேர் கைது

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.12-

சிலாங்கூர் உட்பட சுற்று வட்டாரப் பகுதிகளில் வெளிநாட்டவர்களால் நடத்தப்படும் 22 கேளிக்கை மையங்களில் மேற்கொள்ளப்பட்ட ஓப் மேகா ஹிபுரான் சோதனை நடவடிக்கையில் 288 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் சிஐடி இயக்குநர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்குத் தொடங்கிய இந்த அதிரடிச் சோதனையில் சிலாங்கூரில் 16 கேளிக்கை மையங்கள் உள்ளிட்ட 22 கேளிக்கை மையங்கள் முறையான லைசென்ஸின்றி இயங்கியதோடு முறையான பயணப் பத்திரங்கள், வேலை பெர்மிட் இல்லாத வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளது என்று டத்தோ குமார் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்டோரில் நால்வர் அந்தக் கேளிக்கை மையங்களின் பாதுகாவலர்களாவர். 21 பேர் முகப்பிடச் சேவையாளர்களாவர். 26 பேர் பணியாளர்களாவர். 170 பேர் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களாவர். ஒருவர் மதுபானச் சேவையாளர் ஆவார் என்று டத்தோ குமார் விளக்கினார்.

புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம், சிலாங்கூர் போலீஸ் பயிற்சியகம், கோலாலம்பூர் போலீஸ் துறை, ஊராட்சித்துறையினர் மற்றும் தீயணைப்பு இலாகா அதிகாரிகள் இந்த சோதனையில் களம் இறக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News