Sep 23, 2026
Thisaigal NewsYouTube
சரவாக்கில் ஆற்றில் இறங்கிய சிறுவன் மாயம் – முதலை தாக்கியதாக அச்சம்
தற்போதைய செய்திகள்

சரவாக்கில் ஆற்றில் இறங்கிய சிறுவன் மாயம் – முதலை தாக்கியதாக அச்சம்

Share:

சரவாக் மாநிலம் பந்து, ஸ்ரீ அமான் பகுதியில், முதலை தாக்கியதாக நம்பப்படும்15 வயது சிறுவனைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இது குறித்து சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தகவலின் படி, சுங்கை செட்டராப் ஆற்றில், அந்தச் சிறுவன் 7 நண்பர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, வலையை மீட்பதற்காக ஆற்றில் இறங்கிய அவர் மேலே வரவே இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு அருகில் முதலை ஒன்று காணப்பட்டதாக அவரது உறவினர் தெரிவித்ததால், சிறுவன் முதலை தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

இன்று மதியம் 12.35 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்தில் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Related News