Jan 13, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் சட்டத்துறைத் தலைவர் தோமி தோமஸுக்கு எதிரான நஜிப்பின் மேல் முறையீட்டு வழக்கு ​அப்பீல் நீதிமன்றத்தில் தள்ளுபடி: உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நிலை நிறுத்தியது
தற்போதைய செய்திகள்

முன்னாள் சட்டத்துறைத் தலைவர் தோமி தோமஸுக்கு எதிரான நஜிப்பின் மேல் முறையீட்டு வழக்கு ​அப்பீல் நீதிமன்றத்தில் தள்ளுபடி: உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நிலை நிறுத்தியது

Share:

கோலாலம்பூர், ஜனவரி.13-

முன்னாள் சட்டத்துறைத் தலைவர் தோமி தோமஸுக்கு Tommy எதிராகத் தாக்கல் செய்திருந்த, 1.9 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டு வழக்கை, மீண்டும் விசாரணைக்குக் கொண்டு வரக் கோரும், முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரஸாக்கின் மேல் முறையீட்டு வழக்கை, மேல் முறையீட்டு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

கடந்த 2022-ஆம் ஆண்டு, நவம்பர் 25-ஆம் தேதி, இவ்வழக்கை இரத்து செய்தாக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, நீதிபதிகள் P Ravinthran, Wong Kian Kheong மற்றும் Nadzarin Wok Nordin ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட அமர்வு இன்று நிலைநிறுத்தியது.

1எம்டிபி மற்றும் சர்வதேச பெட்ரோலிய முதலீடு தொடர்பான வழக்குகளில், தோமஸ் தனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைப்பதில், தீங்கிழைக்கும் நோக்கத்துடன் செயல்பட்டதாக நஜிப் குற்றம் சாட்டியிருந்தார்.

இவ்விவகாரத்தில், சிவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட சமயத்தில், குற்றவியல் வழக்கானது தொடங்கப்படவில்லை என்பதால், முறைகேடு, தீய நோக்கத்துடன் கூடிய செயல் மற்றும் கவனக்குறைவு ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தொடரப்பட்ட இவ்வழக்கானது, முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்ற உயர்நீதிமன்றத்தின் கருத்தை தாங்களும் ஏற்றுக் கொள்வதாக நீதிபதி P Ravinthran குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், நஜிப், தோமஸுக்கு 12,000 ரிங்கிட் செலவுத் தொகையாக வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related News

ஏர் ஆசியா எக்ஸ், ஏர் ஆசியா என மறுபெயரிடப்படுகிறது

ஏர் ஆசியா எக்ஸ், ஏர் ஆசியா என மறுபெயரிடப்படுகிறது

19 வயது பெண்ணிடம் கொள்ளையடித்த பின்னர் பாலியல் பலாத்காரம்: ஆடவர் மீது குற்றச்சாட்டு

19 வயது பெண்ணிடம் கொள்ளையடித்த பின்னர் பாலியல் பலாத்காரம்: ஆடவர் மீது குற்றச்சாட்டு

உள்துறை அமைச்சருக்கு எதிரான வழக்கை மீட்டுக் கொள்ள லிபெர்டி அமைப்பு முடிவு

உள்துறை அமைச்சருக்கு எதிரான வழக்கை மீட்டுக் கொள்ள லிபெர்டி அமைப்பு முடிவு

மாணவர்களுக்கான நிதி உதவி எவ்வித கட்டண பிடிப்புமின்றி முழுமையாக ஒப்படைக்கப்பட வேண்டும்

மாணவர்களுக்கான நிதி உதவி எவ்வித கட்டண பிடிப்புமின்றி முழுமையாக ஒப்படைக்கப்பட வேண்டும்

முன்னாள் ஐஜிபி-க்கு எதிரான அவதூறு வழக்கு: அமைச்சர் ஹன்னா இயோ வெற்றி! – 2  லட்சத்து 50 ஆயிரம்  ரிங்கிட் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் ஐஜிபி-க்கு எதிரான அவதூறு வழக்கு: அமைச்சர் ஹன்னா இயோ வெற்றி! – 2 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

கூலிமில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற 16 வயது மாணவர் ஆற்றில் மூழ்கி மரணம்

கூலிமில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற 16 வயது மாணவர் ஆற்றில் மூழ்கி மரணம்