இந்த நாட்டில் மலாய்க்காரர்கள் பகடைக்காய்களாக பயன்படுத்தப்படுகிறார்கள் என்றும், பகிரங்கமாக ஏமாற்றப்படுகிறார்கள் என்றும் இனத்துவேச தன்மையில் பேசி வரும் பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹடி ஆவாங்கிற்கு எதிராக போலீஸ் புகார்கள் அதிகரிக்கின்றன. ஆகக் கடைசியாக, பினாங்கு புக்கிட் பெண்டேரா எம்.பி. சியர்லீனா அப்துல் ரஷீத், ஹடி ஆவாங்கிற்கு எதிராக போலீஸ் புகார் செய்துள்ளார்.
அந்த மதவாதியின் ஒவ்வொரு அறிக்கையும், குற்றவியல் அவதூறாகும் என்பதுடன், நிந்திக்கும் தன்மை கொண்டதாகும். பிற இனத்தவர்களுக்கு எதிராக மலாய்க்காரர்களைத் தூண்டி விடும் ஹடி ஆவாங்கின் செயல் மிக ஆபத்தானதாகும் என்று அந்த எம்.பி. தமது போலீஸ் புகாரில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் பொது அமைதியை சீர்குலைத்து அதன் வாயிலாக குளிர் காய்வதற்குத் துடிக்கும் ஹடி ஆவாங்கிற்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சியர்லீனா வலியுறுத்தியுள்ளார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


