சிரம்பான், நவம்பர்.19-
நெடுஞ்சாலையின் அவசரத் தடத்தில் பஞ்சரான காரின் டயரை மாற்றிக் கொண்டு இருந்த மாதுவை காண்டெய்னர் லோரி மோதியதில் கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டார்.
இந்தச் சம்பவம் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் 260.6 ஆவது கிலோமீட்டரில் சிரம்பானுக்கு அருகில் இன்று காலையில் நிகழ்ந்தது.
இதில் 31 வயது மாது உயிரிழந்ததாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் அஸஹார் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
காடோங்கைச் சேர்ந்த அந்த மாது, செனாவாங்கில் உள்ள வேலை இடத்திற்குக் காரில் சென்று கொண்டிருந்த போது காரின் வலதுபுற டயர், பஞ்சரானதாகக் கூறப்படுகிறது. காரை அவசரத் தடத்தில் நிறுத்தி, டயரை மாற்றிக் கொண்டு இருந்த போது, அவரை 24 வயது நபர் செலுத்திய காண்டெய்னர் லோரி மோதித் தள்ளியதாக அஸஹார் குறிப்பிட்டார்.
சவப் பரிசோதனைக்காக அந்த மாதுவின் உடல் ரெம்பாவ் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார்.








