Oct 17, 2026
Thisaigal NewsYouTube

கொலை மிரட்டல், போலீசார் தீவிர விசாரணை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கொலை மிரட்டல், போலீசார் தீவிர விசாரணை

கோலாலம்பூர், ந. 13-


சில சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட லஞ்ச ஊழல் பேரம் தொடர்பான ஆதாரங்களை தாம் கொண்டு இருப்பதாக அறிவித்துள்ள ஒருவருக்கு, இரண்டு துப்பாக்கி படங்கள் அனுப்பப்பட்டு, கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் போலீசார் தீவிர புலன் விசாரணை செய்து வருவதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட நபர், கடந்த திங்கட்கிழமை வாட்ஸ்ஆப் மூலம் இந்த கொலை மிரட்டலை பெற்றுள்ளதாக தனது போலீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு கட்டுமான குத்தகையாளரான 36 வயதுடைய அந்த நபர், ஓர் உணவகத்தில் அமர்ந்திருந்த போது, 16 விநாடிகளை கொண்ட குரல் பதிவின் வாயிலாக இந்த கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது தொடர்பில் விசாரணை தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ஐஜிபி தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →