Sep 27, 2026
Thisaigal NewsYouTube
3 முறை பதவி நீட்டிப்பு எனக்குக் கிடைத்த கௌரவம்!" - ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் ஆசாம் பாக்கி உருக்கம்
தற்போதைய செய்திகள்

3 முறை பதவி நீட்டிப்பு எனக்குக் கிடைத்த கௌரவம்!" - ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் ஆசாம் பாக்கி உருக்கம்

Share:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமைப் பொறுப்பில் மூன்று முறை பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது தமக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் என அதன் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ ஆசாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

தமது பணிக்காலத்தை நீட்டித்து வாய்ப்பளித்த மாட்சிமை தங்கிய மாமன்னருக்குத் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்ட டான்ஸ்ரீ அசாம் பாக்கி, மே 13 முதல் பொறுப்பேற்கவுள்ள புதிய தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாலிம் அமானுக்கு அதிகாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

அரசியலில் ஈடுபடும் எண்ணம் உள்ளதா என்ற கேள்விக்குப் பதிலளித்த அசாம் பாக்கி, ஒரு அரசு அதிகாரியாக மக்களுக்குப் பணியாற்றுவதிலேயே தாம் அதிக மகிழ்ச்சி காண்பதாகக் குறிப்பிட்டார். கடந்த 2020-ம் ஆண்டு முதல் ஆணையத்தை வழிநடத்தி வரும் ஆசாம் பாக்கி, வரும் மே 12-ம் தேதியுடன் தனது பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

Related News