Jun 4, 2026
Thisaigal NewsYouTube
ஆபாச சைகை காட்டி ஆபத்தான முறையில் ஓட்டிய லாரி ஓட்டுநருக்கு ஒரு நாள் சிறை, RM8,000 அபராதம்
தற்போதைய செய்திகள்

ஆபாச சைகை காட்டி ஆபத்தான முறையில் ஓட்டிய லாரி ஓட்டுநருக்கு ஒரு நாள் சிறை, RM8,000 அபராதம்

Share:

பாலிக் பூலாவ், ஜூன்.04-

கடந்த மே 28 ஆம் தேதி பாலிக் பூலாவ், ஜாலான் துன் டாக்டர் அவாங் பகுதியில், ஆபாச சைகை காட்டியது மற்றும் ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டிய குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்ட 37 வயது லாரி ஓட்டுநர் டான் சீ காங்கிற்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று தண்டனை விதித்தது.

மாஜிஸ்திரேட் Chia Huey Ting, சம்பந்தப்பட் குற்றவாளிக்கு ஒரு நாள் சிறைத் தண்டனையும், மொத்தம் 8 ஆயிரம் ரிங்கிட் அபராதமும் விதித்ததோடு, அவரது ஓட்டுநர் உரிமத்தை ஐந்து ஆண்டுகளுக்கு ரத்து செய்து உத்தரவிட்டார்.

அபராதத்தைச் செலுத்தத் தவறினால் அவர் 6 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும். மற்றொரு காரோட்டியை அச்சுறுத்தும் வகையில் ஆபாச சைகை காட்டியதற்காக 3 ஆயிரம் ரிங்கிட் அபராதமும், ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்தியதற்காக ஒரு நாள் சிறை மற்றும் 5 ஆயிரம் ரிங்கிட் அபராதமும் தனித்தனியாக விதிக்கப்பட்டன.

சமூக ஊடகங்களில் வைரலான காணொளியைத் தொடர்ந்து கடந்த மே 30-ல் இவர் கைது செய்யப்பட்டார்.

Related News