Jun 4, 2026
Thisaigal NewsYouTube
இந்தோனேசியாவிலிருந்து சுகாதாரத் துறை பணியாளர்களைப் பெறுவது குறித்து மலேசியா பரிசீலனை
தற்போதைய செய்திகள்

இந்தோனேசியாவிலிருந்து சுகாதாரத் துறை பணியாளர்களைப் பெறுவது குறித்து மலேசியா பரிசீலனை

Share:

ஜகார்த்தா, ஜூன்.04-

இந்தோனேசியப் பணியாளர்களை மலேசியாவின் சுகாதாரத் துறைக்கு, குறிப்பாகச் தாதியர் பணிக்கு விரிவுபடுத்துவது குறித்த அந்நாட்டின் பரிந்துரையை மலேசியா பரிசீலிக்கும் என வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.

ஜாகார்த்தாவில் நடைபெற்ற இருதரப்பு கூட்டு ஆணைக்குழு கூட்டத்திற்குப் பிறகு முகமட் அவர் இத்தகவலை வெளியிட்டார்.

இருப்பினும், தாதியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுப் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் கொள்கை மலேசியச் சுகாதார அமைச்சின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால் இது குறித்து உள்நாட்டில் விவாதிக்கப்படும் என்று அவர் கூறினார்.

இந்தப் பரிந்துரை இரு நாடுகளுக்கும் பயனளிப்பதோடு, மலேசியாவின் ஒட்டுமொத்த சுகாதாரத் துறையின் திறனை மேம்படுத்தும் ஒரு நல்ல நடவடிக்கையாக இருக்கும் என்றும் அமைச்சர் முகமட் ஹசான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related News