மாது ஒருவர், தனது 14 வயது மகனுடன் தகாத உறவு கொண்ட அந்த ஆபாச காணொளியைச் சமூக வலைத்தளங்களில் பகிரவிட்டதாக நம்பப்படும் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோலசிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் ரம்லி கசா தெரிவித்துள்ளார். 35 வயதுடைய அந்த நபர், நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.45 மணியளவில் ஷா ஆலாம், பண்டார் புன்சாக் அலாமில் உள்ள ஓர் உணவகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட நபரின் பின்னணியை ஆராய்ந்த போது, பண்டார் ஶ்ரீ டாமான்சாராவில் வசிக்கும் அந்த சந்தேகப் பேர்வழி, மிரட்டி பணம் பறிப்பது, பாலியல் பலாத்காரம் தொடர்பில் இரண்டு குற்றப் பதிவுகளைகொண்டுள்ளது தெரியவந்துள்ளதாக ரம்லி கசா குறிப்பிட்டார். சம்பந்தப்பட்ட சிறுவனின் 34 வயது தாயார் கைது செய்யப்பட்டுள்ள வேளையில் ஆபாச காணொளியைப் பதிவேற்றம் செய்ததாக நம்பப்படும் பிடிபட்ட ஆடவரிடமிருந்து கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக ரம்லி கசா தெரிவித்தார்.

Related News

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்

அந்த இந்தியப் பிரஜையின் முன்னாள் முதலாளியை ஆள்பல இலாகா விசாரணை நடத்தும்

மளிகைக்கடையில் கொள்ளையிட்டதாக போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு


