கடந்த அக்டோபர் 30ஆம் நாள், நீலாயில் உள்ள லாமான் நிலாய் இம்பியானில் 55 வயது கொண்ட ஆடவரின் வீட்டின் வளாகத்தில் மிளகாய் சாற்றை வீசியதற்காக மெக்கானிக்கிற்கு இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மூவாயிரம் வெள்ளி அபராதம் விதித்தது.
குற்றத்தை ஒப்புக்கொண்ட 23 வயது கொக் கார் வெய் க்கு இந்த தண்டனையை மஜிஸ்த்ரெட் ஷெட் ஃபரிட் ஷெட் அலி விதித்தார். அதனைச் செலுத்த வில்லை என்றால் 5 மாதங்கள் சிறை வாசத்தை கொக் கார் வெய் அனுபவிக்க வேண்டும்.
குற்றஞ்சாட்டப்பட்டவரும் பிடிபடாத இன்னொருவரும் மிளகாய் சாறு நிறைந்த பையை வீசி இருக்கிறார்கள்,
மேலும், அங்கீகாரமில்லாத கடன் கொடுக்கும் சேவையை வழங்கும் தரப்பின் ஏவலாளியாக செயல்பட்ட கொக் கார் வெய் தமது முதலாளியால் அவ்வாறு செய்ய வற்புறுத்தப்பட்டார் எனவும் கூறியுள்ளார்.








