Oct 26, 2026
Thisaigal NewsYouTube

அனுமதிக்கப்பட்டதை விட அதிக அரிசி கையிருப்பு - செலாயாங்கில் 41 டன் பறிமுதல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அனுமதிக்கப்பட்டதை விட அதிக அரிசி கையிருப்பு - செலாயாங்கில் 41 டன் பறிமுதல்

செலாயாங் வட்டாரத்தில் உள்ள மொத்த மற்றும் சில்லரை அரிசி வியாபார மையங்கள் மீது அரிசி மற்றும் நெல் கண்காணிப்பு அமலாக்கப் பிரிவினர் சோதனை மேற்கொண்டதாக அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

அச்சோதனையின் போது வர்த்தக உரிமத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ளதை விட கூடுதலாக அரிசியை கடை நிர்வாகத்தினர் வைத்த்ருந்தனர்.

அந்த கடைக்கு எதிராக 1994ஆம் ஆண்டு நெல் மற்றும் அரிசி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் (சட்டம் 522) கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அது தெரிவித்தது.

இந்த நிறுவனம் இரண்டாவது முறையாக இத்தகைய குற்றத்தைப் புரிந்துள்ளதை ஆவணங்கள் காட்டுகின்றன. இரண்டாவது முறையாகப் புரியப்படும் இத்தகைய குற்றங்களுக்கு 50,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படும் என அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.

சட்டம் 522 மற்றும் 1996ஆம் ஆண்டு நெல் மற்றும் அரிசி கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றி நடக்கும்படி அரிசி விற்பனை உரிமத்தை வைத்திருக்கும் அனைத்து தரப்பினரையும் அமைச்சு வலியுறுத்தியது. லைசென்ஸ் விதிகளை மீறும் தரப்பினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது எச்சரித்தது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
ஐந்து மலேசியப் பிள்ளைகளின் தந்தைக்கும் குடியுரிமை மறுப்பு

ஐந்து மலேசியப் பிள்ளைகளின் தந்தைக்கும் குடியுரிமை மறுப்பு

66 ஆண்டுகாலக் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி! உஜோங் பத்து மறுமேம்பாட்டுத் திட்டம் தொடக்கம் – 268 குடும்பங்களுக்கு புதிய நம்பிக்கை!

66 ஆண்டுகாலக் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி! உஜோங் பத்து மறுமேம்பாட்டுத் திட்டம் தொடக்கம் – 268 குடும்பங்களுக்கு புதிய நம்பிக்கை!

பினாங்கு மாநில அரசின் முன்னெடுப்பில் உஜோங் பத்து கிராமம் மறுமேம்பாட்டுத் திட்டம் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றம்

பினாங்கு மாநில அரசின் முன்னெடுப்பில் உஜோங் பத்து கிராமம் மறுமேம்பாட்டுத் திட்டம் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றம்

முன்னாள் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மஹாதேவ் ஷங்கர் காலமானார்

முன்னாள் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மஹாதேவ் ஷங்கர் காலமானார்

மலாக்காவில் 280-க்கும் மேற்பட்ட டாக்சி ஓட்டுநர்களுக்கு தலா 1,000 ரிங்கிட் சிறப்பு உதவி!

மலாக்காவில் 280-க்கும் மேற்பட்ட டாக்சி ஓட்டுநர்களுக்கு தலா 1,000 ரிங்கிட் சிறப்பு உதவி!

பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தை: வணிகர்களுக்கு மாநகர் மன்றம் 18 லட்சம் ரிங்கிட் ஆதரவு

பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தை: வணிகர்களுக்கு மாநகர் மன்றம் 18 லட்சம் ரிங்கிட் ஆதரவு