தமது முன்னாள் கணவர் பட்ட கடனுக்காக தம்மையும், தமது குடும்ப உறுப்பினர்களையும் மிரட்டி வரும் வட்டி முதலைகளின் அச்சுறுத்தலினால் தனித்து வாழும் தாயார் ஒருவர் மிகுந்த அச்சத்தில் வாழ்ந்து வருவதாக புகார் தெரிவித்துள்ளார்..
தம்மை யெங் என்று மட்டுமே அடையாளம் கூறிக்கொண்ட ஜோகூர், பாசீர் கூடாங்கைச் சேர்ந்த 42 வயதுடைய அந்த தனித்து வாழும் மாது, தனது வீட்டில் வட்டி முதலைகளினால் சிவப்பு சாய வீச்சுக்கு ஆளாகியிருப்பதாக குறிப்படுள்ளார்.
ஆகக்கடைசியாக தாம் தங்கியிருக்கும் தமது தங்கையின் வீட்டிற்கு தீ யிடப்பட்டு, கொளுத்தப்படும் என்று வட்டி முதலைகள் எச்சரிக்கை விடுத்து இருப்பதாக டிஏபி ஜோகூர் ஜெயா கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர்கள் கூட்டத்தில் அந்த மாது இதனை தெரிவித்துள்ளார்.








