பினாங்கு, பிறை சட்டமன்றத் தொகுதியில் ஒரு சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் டேவிட் மார்ஷல், பிறை தொகுதியின் ஒவ்வொரு பகுதியையும் நன்கு அறிந்து வைத்திருப்பதால் பிறை மக்களின் நலன் காக்கும் ஒரு முன்னதாரண சட்டமன்ற உறுப்பினராக செயல்பட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். குறிப்பாக கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை செபராங் பிறை நகராண்மைக்கழக உறுப்பினராக தாம் செயல்பட்ட காலத்தில் பிறை தொகுதியில் மக்கள் எதிர்நோக்கிய பல பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு இருப்பதுடன், தொடர்ந்து தீர்வு கண்டு வருவதாக டேவிட் மார்ஷல் கூறுகிறார்.
பிறை, சாய் லெங் பாக் மற்றும் சீனி ஆலைப்பகுதியில் நேற்று ஏற்பட்ட கடும் மழைக்கு மத்தியில் அப்பகுதியில் வெள்ள நீர் மற்றும் சாக்கடை நீரை வெளியேற்றக்கூடிய எக்கியகம் எனப்படும் பாம் ஹவுஸ் ஸை தன்னார்வலர்களுடன் கொட்டும் மழையில் பார்வையிட்ட டேவிட் மார்ஷல், நீர் தங்கு தடையின்றி செல்வதை கண்டு பெருமிதம் தெரிவித்தார். ஒரு காலத்தில் சிறிது நேரம் மழை பெய்தாலேயே தாமான் செனாங்கின் போன்ற பகுதிகள் வெள்ளக்காடாக மாறிவிடும். வெள்ள நீர் வெளியேறுவதற்கும், நீரை உள்வாங்குவதற்கும் முறையான கால்வாய், நீர்பாசன வசதிகள் இல்லாத நிலை இருந்தன.
எனினும் போர்க்கால அடிப்படையில் மிக குறுகிய காலத்தில் தாங்கள் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக இன்று கடும் மழையின் மத்தியில் வெள்ளம் ஏற்படுவது, நீர்த்தேங்கியிருப்பது குறைந்துள்ளதாக டேவிட் மார்ஷல் தெரிவித்தார்.
வரும் சனிக்கிழமை நடைபெறும் பிறை சட்டமன்றத் தேர்தலில் மரம் சின்னத்தில் போட்டியிடும் தமக்கு வாக்களித்து மக்கள் வெற்றி பெறச் செய்வார்களேயானால் அடுத்த ஐந்து ஆண்டு காலக்கட்டத்தில் இது போன்ற சிறந்த மேம்பாட்டை பிறை தொகுதி மக்கள் எதிர்பார்க்க முடியும் என்று டேவிட் மார்ஷர் உறுதி கூறியுள்ளார்.

Related News

மலேசியாவின் தொழிலாளர் சீர்திருத்தங்கள் துணிச்சலானவை: இந்தியத் தூதர் பாராட்டு

தொழிலாளர்களின் ஆங்கிலமொழித் திறனை வலுப்படுத்த மனிதவள அமைச்சு 3 உத்திகளைச் செயல்படுத்துகிறது - டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு


