பாலிக் பூலாவ், ஆகஸ்ட்.30-
ஓர் ஆசிரியரான தனது மனைவிக்குக் கழுத்தில் கடும் காயங்களை விளைவித்து அவரைக் கொலை செய்ய முயற்சித்ததாக நம்பப்படும் நபர் ஒருவரை, 6 நாள் தடுப்புக் காவலில் வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றனர்.
கத்தியினால் தனது மனைவிக்குக் கழுத்தில் காயம் விளைவித்த பின்னர் தன்னையும் காயப்படுத்திக் கொண்ட 30 வயது மதிக்கத்தக்க அந்த ஆசிரியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின்னர் இன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளார்.
கடந்த புதன்கிழமை ஜார்ஜ்டவுன், சுங்கை ஆரா, தாமான் தூனாஸ் மூடாவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர், கடன் தொல்லையால் அவதியுற்று வந்ததாக நம்பப்படுகிறது.
ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டுள்ள கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட போது, அது கொலை முயற்சியில் முடிந்ததாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.








