Mar 12, 2026
Thisaigal NewsYouTube
ஆருடங்களை நிறுத்திக் கொள்வீர், அமைச்சர் சிவகுமார் வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

ஆருடங்களை நிறுத்திக் கொள்வீர், அமைச்சர் சிவகுமார் வலியுறுத்து

Share:

எச். ஆர்.டி. கோர்ப் எனப்படும் மனிதவள மேம்பாட்டுக்கழகத்தின் நிதி விவகாரம் தொடர்பில் பொது கணக்காய்வுக்குழுவான பி.ஏ.சி யின் விசாரணை தொடர்பில் ஆருடங்களை நிறுத்திக்கொள்ளுமாறு மனித வள அமைச்சர் வி.சிவகுமார் கேட்டுக்கொண்டார்.

எச். ஆர்.டி. கோர்ப் தொடர்பில் பயிற்சி நிதி மேலாண்மை சிக்கல்கள் மற்றும் செயல்திறன் விசாரணைக்கு தாம் ஒத்துழைப்பு வழங்குதாக சிவகுமார் மறு உறுதிப்படுத்தினார்.

பி.ஏ.சி என்பது நாடாளுமன்றத்தின் கீழ் நிறுவப்பட்ட பொது கணக்காய்வுக் குழுவாகும். பி.ஏ.சி தனது முக்கியப் பணியை சரிபார்த்து கண்காணிப்பது என்பதை தாம் உணர்ந்துள்ளதாக சிவகுமார் தெரிவித்தார்.

நிர்வாகத்தின் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்த தேசிய நிதி நிர்வாகம் மற்றும் நாட்டின் நிதி நிர்வாகம் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பொது கணக்காய்வுக்குழுவின் விசாரணையை பாதிக்கக்கூடிய ஊகங்கள் மற்றும் ஆருடங்களை தவிர்த்துக் கொள்ளமாறு அனைத்து தரப்பினரையும் சிவகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு