Mar 16, 2026
Thisaigal NewsYouTube
அரசியல்வாதிகளின் ஓய்வூதியம் ஆய்வு செய்க
தற்போதைய செய்திகள்

அரசியல்வாதிகளின் ஓய்வூதியம் ஆய்வு செய்க

Share:

அரசாங்கம் நிதிச் சிக்கலை எதிர்கொள்கின்ற நிலையில், அதனைச் சமாளிக்கும் வழியாக ஓய்வூதியம் வழங்கப்படும் முறை நீக்கப்படுவது குறித்து ஆய்வு செய்து வருகின்ற நிலையில், அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படும் ஓய்வுதியமும் அதில் பரிசீலிக்கப்பட வேண்டும்ம் என கியூப்பெக்ஸ் எனப்படும் பொதுச் சேவைத் துறை ஊழியர்கள் காங்கிரஸ் பரிந்துரைத்துள்ளது.

அந்தப் பட்டியலில், மக்களவை உறுப்பினர்கள், மேலவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் போன்ற பதவிகளையும் அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும் என கியூப்பெக்சின் தலைவர் Datuk Dr Adnan Mat குறிப்பிட்டார்.

சேவை காலத்திலேயே பல அனுகூலங்களையும் சலுகைகளையும் பெறுகிறார்கள். பெரும்பாலும் ஐந்தாண்டுகள் மட்டுமே பணியில் இருக்கும் இந்தத் தரப்புக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை நீக்கும் பரிந்துரைக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என Datuk Dr Adnan Mat சொன்னார்.

Related News

அரசியல்வாதிகளின் ஓய்வூதியம் ஆய்வு செய்க | Thisaigal News