May 18, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவின் முதல் ‘முதன்மை பின்ட் அதிகாரி’யைத் தேடும் கின்னஸ்!
தற்போதைய செய்திகள்

மலேசியாவின் முதல் ‘முதன்மை பின்ட் அதிகாரி’யைத் தேடும் கின்னஸ்!

Share:

கோலாலம்பூர், ஜூன்.26-

கின்னஸ் மலேசியா, நாட்டின் முதல் 'Chief Pint Officer – CPO’ பதவியை நிரப்ப ஒரு தனித்துவமான தேசிய அளவிலான தேடலைத் தொடங்கியுள்ளது. இது வெறும் பெயரல்ல, கின்னஸ் தரத்தை நிலைநிறுத்தும் ஒரு முக்கியப் பங்கைச் சுட்டிக் காட்டுகிறது. சரியான கின்னஸ் பின்ட்டை அடையாளம் கண்டு, அதன் தரத்தை உறுதிச் செய்யும் தரத் தூதராகப் பணிபுரியும் இந்த அதிகாரி, கின்னஸ் அருந்தும் அனுபவத்தை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுவார்.

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், 21 வயதுக்கு மேற்பட்ட முஸ்லிம் அல்லாதவர்களாக இருக்க வேண்டும். இந்தப் பணிக்கு டப்ளினுக்குச் செல்ல ஒரு முழுச் செலவுப் பயணம், மாதந்தோறும் இலவச கின்னஸ் பொறுப்புடன் அருந்த வேண்டும், கின்னஸ் நிகழ்வுகளுக்கு விஐபி அழைப்புகள் போன்ற பல சலுகைகள் அடங்கும். விண்ணப்பதாரர்கள், தில்ட் டெஸ்ட் மூலம் சரியான கின்ன்ஸ் பின்ட்டைக் கண்டறிந்து, அதன் புகைப்படத்தை @GuinnessMY என்ற பக்கத்தைக் குறியிட்டு, #GuinnessTiltMY என்ற ஹேஷ்டேக்குடன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் பகிர வேண்டும். அதிகா சரியான பதிவுகளைச் சமர்ப்பிப்பவர்கள் அடுத்தக் கட்டத்திற்குத் தெரிவு செய்யப்படுவார்கள். விண்ணப்பங்கள் 2025 ஜூலை 31 அன்று நிறைவடையும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட 20 விண்ணப்பதாரர்கள் ஒரு பிரத்யேக கின்னஸ் தலைமைத்துவத் திட்டத்தில் பங்கேற்பார்கள். அங்கு கின்னஸ் தயாரிப்புகள் பற்றிய ஆழமான அறிவு, சரியான பின்ட்டை ஊற்றுவதற்கான 7Cs பற்றிய பயிற்சி, முன்னணி கின்னஸ் இரசிகர்களின் சமூகத்தில் இணைதல் போன்றவற்றைப் பெறுவார்கள். திட்டத்தின் முடிவில், மலேசியாவின் முதல் கின்னஸ் 'Chief Pint Officer 'யைத் தீர்மானிக்க இறுதிப் போட்டி நடைபெறும். வெற்றியாளர் டப்ளினுக்கு ஒரு முழுச் செலவுப் பயணம், மாதாந்திர கின்னஸ் சப்ளை, கின்னஸ் நிகழ்வுகளுக்கு விஐபி அழைப்புகள், RM888 மதிப்புள்ள பிறந்தநாள் கொண்டாட்டம் போன்ற அற்புதமான பரிசுகளைப் பெறுவார். இந்தத் தேடல், கின்னஸின் தரத்தையும் பாரம்பரியத்தையும் கொண்டாடுவதோடு, ஒவ்வொரு சரியான பின்ட்டின் பின்னணியில் உள்ள கைவினைத்திறனைப் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் என கின்னஸ் மலேசியா தெரிவித்துள்ளது.

Related News

மாணவிகளை எட்டிப் பார்த்த தலைமை ஆசிரியரின் கணவர் கைது

மாணவிகளை எட்டிப் பார்த்த தலைமை ஆசிரியரின் கணவர் கைது

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது