குவாந்தான், ஆகஸ்ட்.28-
பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றத்திலிருந்து நாடு விடுபட்டு இருக்க நாளை வெள்ளிக்கிழமைத் தொழுகையில் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் பிரார்த்தனை நடத்துமாறு மேன்மை தங்கிய பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.
அண்மையில் மலேசியாவில் சில இடங்களில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மாநிலத்தின் பாதுகாப்பு மற்றும் மக்களின் நல்வாழ்வை உறுதிச் செய்வதற்கு இறையருள் காக்க வேண்டும் என்று சுல்தான் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.
தங்களின் பிரார்த்தனையின் மூலம் இத்தகைய விண்ணப்பத்தை மாநில மக்கள் முன்வைப்பது வழி எந்தவொரு விரும்பத்தகாத சம்பவத்திலிருந்து மக்களைக் காக்க இறைவன் அருள் புரிய வேண்டும் என்று முஸ்லீம்கள் பிரார்த்திக்குமாறு பகாங் சுல்தான் கேட்டுக் கொண்டார்.








