Sep 27, 2026
Thisaigal NewsYouTube
குளுவாங்கில் புலியின் கால் தடங்கள் கண்டறியப்பட்டன
தற்போதைய செய்திகள்

குளுவாங்கில் புலியின் கால் தடங்கள் கண்டறியப்பட்டன

Share:

ஜோகூர் மாநிலம் குளுவாங் பகுதியில் உள்ள நவீன வேளாண்மை திட்டப் பகுதி அருகே புலியின் கால் தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அதன் காரணமாக, அப்பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அடுத்த இரண்டு வாரங்களுக்கு கண்காணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக வனவிலங்கு மற்றும் தேசிய பூங்கா துறையான பெர்ஹிலிடிான் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி, சிம்பாங் ரெங்கம் காடு பாதுகாப்பு பகுதியிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் உள்ளூர் மக்கள் இந்த கால் தடங்களை கண்டுபிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், பெர்ஹிலிடிான் அதிகாரிகள் அந்த தடங்களை ஆய்வு செய்ததில், சுமார் 12 செ.மீ அகலம் மற்றும் 11 செ.மீ நீளமுடைய இத்தடங்கள் புலியின் கால்தடங்கள் என உறுதிப்படுத்தப்பட்டதாக அதன் பொது இயக்குநர் அப்துல் காதிர் அபு ஹாஷிம் தெரிவித்துள்ளார்.

Related News