Dec 3, 2025
Thisaigal NewsYouTube
அபாண்டி அலியை தாம் நீக்கியது சரியே
தற்போதைய செய்திகள்

அபாண்டி அலியை தாம் நீக்கியது சரியே

Share:

பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான அரசாங்கத்தில் தாம் பிரதமராக இருந்த போது, அப்போதைய சட்டத்துறை தலைவர் அபாண்டி அலியை தாம் நீக்கியது சரி என்பதற்கு பேங்க் நெகாராவின் முன்னாள் கவர்னர் டான் ஸ்ரீ ஜெட்டி அஜீஸ், நீதிமன்றத்தில் அளித்துள்ள சாட்சியமே சான்றாகும் என்று துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார்.

1எம்.டி.பி நிறுவனத்தில் நிகழ்ந்துள்ள முறைகேடுகள் குறித்து சட்டத்துறை தலைவர் என்ற முறையில் அபாண்டி அலி யிடம் தாம் புகார் அளித்தும், அவர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஜெட்டி அஜீஸ், நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்து இருந்தார்.

சட்டத்துறை தலைவர் பதவியிலிருந்து அபாண்டியை அலியை நான் எதற்காக நீக்கினேன் என்பதற்கு சரியான காரணங்கள் இருக்கும் பட்சத்தில், தமது பதவி நீக்கத்தை எதிர்த்து 22 லட்சம் வெள்ளி இழப்பீடு கோரி, அபாண்டி அலி , என் மீதும் ,அரசாங்கத்தின் மீதும் தொடுத்திருந்த வழக்கை அன்றைய பிரதமர்இஸ்மாயில் சப்ரி யாக்கோப், எதற்காக நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக்கொள்ள முற்பட்டார் என்று துன் மகாதீர் கேள்வி எழுப்பினார்.

Related News