கிள்ளான், ஜாலான் கெபூன் அருகில் கால்வால் ஓரத்தில் ஆடவரின் எலும்புக்கூடு ஒன்று கண்டு பிடிக்கப்ப்டடுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8.15 மணியளவில் ஓர் ஆடவரிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்ற போலீசார், எலும்புக்கூடு கிடப்பது குறித்து தகவல் அளிக்கப்பட்டதாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சா ஹூங் ஃபாங் தெரிவித்தார். அந்த எலும்புக்கூடு, கால்வாயில் செல்லும் நீர்குழாயில் சிக்கிக்கிடந்தது தெரியவந்துள்ளது. தடயவியல் சோதனைக்காக அந்த மனித எலும்புக்கூடு, ஷா ஆலாம் மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக சா ஹூங் ஃபாங் குறிப்பிட்டார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


