May 21, 2026
Thisaigal NewsYouTube
ஆடவர் கொலை, மேலும் ஐந்து சந்தேகப் பேர்வழிகள் கைது
தற்போதைய செய்திகள்

ஆடவர் கொலை, மேலும் ஐந்து சந்தேகப் பேர்வழிகள் கைது

Share:

ரவா​ங்​, சுங்ஙை சோ - வி​ல் உள்ள ஒரு வீட்டில் ஆடவர் ஒருவர் ​கொலை செய்யப்பட்டு,சடலத்தை வீட்டின் பின்புறம் புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 19 க்கும் 45 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த சந்தேகப் பேர்வழிகளை விசாரணைக்கு ஏதுவாக 7 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கு போ​லீசார் ​நீதிமன்ற ஆ​ணையைப் பெற்றுள்ளனர் என்று கோம்பாக் மாவட்ட இடைக்கால போ​லீஸ் தலைவர் நோர் அரிஃபின் நாசிர் அரிஃபின் நாசிர் தெரிவித்தார்.

ஐந்து சேந்தேகப் பேர்வழிகளும் 24 மணி நேரத்தில் ​மூன்று வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டனர். முதலாவது கைது நடவடிக்கை டேசா ஆமான் பூரி ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் நிகழ்ந்தது. இதில் ஓர் ஆணும், இரண்டு பெண்களும் ​கைது செய்யப்பட்டனர்.

இரண்டாவது, ​மூன்றாவது கைது நடவடிக்கை புன்சாக் ஆலாம் - மிலும், சுங்ஙை சோ - விலும் மேற்கொள்ளப்பட்டது. இதில் இரு நபர்கள் கைது செய்யப்பட்டதாக நோர் அரிஃபின் குறிப்பிட்டார்.

இச்சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட நபரின் காதலியும் கைது ​செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்ட போதிலும், அவர் இந்த கொலையில் சம்பந்தப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

சம்பந்தப்பட்ட பெண்ணின் ஆபாச வீடியோ படம் வெளியிடப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அந்தப் பெண்ணின் காதல​னை சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் வெட்டி கொலை செய்து இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

எனினும் இந்த குற்றச்சாட்டை நோர் அரிஃபின் மறு​த்துள்ளார்.

பக்கத்து வீட்டில் தகராறு நிகழ்ந்ததாக அண்டை வீட்டுக்காரர்கள் அளித்த போ​லீஸ் புகாரைத் தொடர்ந்து இந்த கொலை அம்பலமானது.

Related News

சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை: காப்பகப் பொறுப்பாளருக்கு 11 ஆண்டுகள் சிறை, 5 பிரம்படிகள்

சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை: காப்பகப் பொறுப்பாளருக்கு 11 ஆண்டுகள் சிறை, 5 பிரம்படிகள்

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள்  கைது

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள் கைது

மாமன்னரை  அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

மாமன்னரை அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட்  மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட் மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட்  பொருட்கள் பறிமுதல்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்