புத்ராஜெயா, டிசம்பர்.23-
தனது மனைவியை ரப்பர் குழாய் மற்றும் துணி மாட்டும் hanger-ரினால் அடித்துக் காயப்படுத்திய குற்றத்திற்காக நபர் ஒருவருக்கு புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
லோரி உதவியாளரான 40 வயது ஃபைசால்ருல்லா ஓமார் ஸுகி என்ற அந்த நபர் கைது செய்யப்பட்ட தினத்திலிருந்து தண்டனை நடப்புக்கு வருவதாக மாஜிஸ்திரேட் எஸ்ரின் ஸாகாரியா உத்தரவிட்டார்.
ஏற்கனவே இரண்டு முறை தண்டிக்கப்பட்ட குற்றப்பதிவைக் கொண்டுள்ள அந்த நபர், கடந்த நவம்பர் 13 ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் புத்ராஜெயா பிரசிண்ட் 9 இல் உள்ள தனது மனைவி நோர் ஹாஷிமா அஹ்மாட்டைக் கடுமையாகக் தாக்கிக் கடுங்காயங்களை விளைவித்ததாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.








