கோத்தா பாரு, அக்டோபர்.05-
மலேசியாவில் மானிய விலையில் பாக்கெட்டுகளில் கிடைக்கும் சமையல் எண்ணெய், அதிக இலாபத்திற்காகத் தாய்லாந்திற்குச் சட்டத்திற்குப் புறம்பாகக் கடத்தப்படுவதாகக் கிளந்தான் உள்நாட்டு வணிகம், வாழ்க்கைச் செலவின அமைச்சு சந்தேகம் தெரிவித்துள்ளது. இதற்குப் பின்னால், உடனடியாகப் பணம் சம்பாதிக்க நினைக்கும் சில உற்பத்தியாளர்கள், மொத்த வியாபாரிகளும் சில்லறை விற்பனையாளர்களும் தங்கள் உரிமைகளைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்று அதன் கிளந்தான் இயக்குநர் அஸ்மான் இஸ்மாயில் குறிப்பிட்டுள்ளார்.
உரிமம் அல்லது ஒதுக்கீட்டைத் தவறாகப் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஐந்து நிறுவனங்கள் மீது ஏற்கனவே கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்திற்குப் புறம்பானக் கடத்தலைக் கட்டுப்படுத்த, எண்ணெய் விநியோகத்தைக் கண்காணிக்க உதவும் 'e-COSS' அமைப்பு இப்போது பயன்படுத்தப்படுகிறது என அவர் மேலும் சொன்னார்.








