கோலாலம்பூர், டிசம்பர்.01-
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை கோலாலம்பூர், Chow Kit பகுதியில் உள்ள ஒரு SPA (ஸ்பா) மையத்தில் ஓரினச் சேர்க்கை தொடர்பாக பிடிபட்ட 208 பேரில் 17 பேர் அரசாங்கப் பணியாளர்கள், பதின்ம வயதுடையவர்கள், மற்றும் மூத்தக் குடிமக்கள் என்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதன் தொடபில் கல்வி அமைச்சின் அதிகாரிகள் சிலரும் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கல்வி அமைச்சு இன்று கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இத்தகைய ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் செயல்பாடு உறுதிச் செய்யப்பட்டால் அவர்கள் கல்விக்கழகங்களிலிருந்து வெளியேற்றப்படுவர் என்று கல்வி அமைச்சு எச்சரித்துள்ளது.
அந்த ஆசிரியர்களின் ஒழுங்கீன நடவடிக்கை குறித்து தற்போது அமைச்சு அளவிலான விசாரணை நடைபெற்று வருவதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








