Jun 15, 2026
Thisaigal NewsYouTube
AG மௌனம் சாதிப்பது ஏன்?
தற்போதைய செய்திகள்

AG மௌனம் சாதிப்பது ஏன்?

Share:

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப், குற்றவாளி என்று உறுதிசெய்து, 12 ஆண்டு சிறைத் தண்டனையை விதித்த, நீதிபதி நஸ்லான் கஸாலிக்கு எதிராக கூறப்படும் லஞ்ச ஊழல் குற்றச் சாட்டு குறித்து சட்டத் துறை தலைவர் இட்ரூஸ் ஹருன் எதுவும் கருத்துரைக்காமல் மௌனம் சாதித்து வருவது ஏன் என்று கேள்வி எழுப்பட்டுள்ளது.

நஜீப் சம்பந்தப்பட்ட SRC International வழக்கில், உயர் நீதிமன்ற விசாரணை நீதிபதி என்ற முறையில் நஸ்லான் கஸாலிக்கு, தனிப்பட்ட நலன் சார்ந்த அம்சங்கள் இருந்துள்ளன என்று கூறப்படும் குற்றச் சாட்டு தொடர்பில், எதிர் வினையாற்ற சட்டத்துறைத் தலைவர் இட்ரூஸ் ஹருன் தவறியிருப்பது ஏன் என்று மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் 14 முன்னாள் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தற்போது அப்பீல் நீதிமன்ற நீதிபதியாக விளங்கும் முகமட் நஸ்லானின் பெயருக்கு ஏற்பட்டுள்ள இந்தக் கலங்கத்தைத் துடைக்க, சட்டத்துறைத் தலைவர் தவறிவிட்டதாக, வழக்கறிஞர் மன்றத்தின் அந்த 14 தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்