சிலாங்கூர், அம்பாங், தாமான் அம்பாங் ஹிலிரில் பெய்த கனத்த மழை மற்றும் புயலினால் அங்குள்ள அடுக்குமாடி வீட்டு குடியிருப்புப்பகுதி மற்றும் கடைகளின் மேற்கூரைகள் பறந்தன. இந்தச் சம்பவத்தினால் மீட்பு நடவடிக்கை மேற்கொள்வதற்கு அந்த குடியிருப்புப் பகுதிக்குள் நுழைவதில் தாங்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் அமாட் முக்லிஸ் முக்தார் கூறினார். எனினும் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் 4.49 மணி அளவில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் தீயணைப்பு படையினர் அவசர அழைப்பை பெற்றதைத் தொடர்ந்து பண்டான் மீட்பு தீயணைப்பு நிலையத்திலிருந்து ஐந்து வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என்று அமாட் முக்லிஸ் குறிப்பிட்டார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


