Mar 13, 2026
Thisaigal NewsYouTube
ஒரு சல்லிக் காசுகூட குடும்பத்தினர் எடுக்கவில்லை
தற்போதைய செய்திகள்

ஒரு சல்லிக் காசுகூட குடும்பத்தினர் எடுக்கவில்லை

Share:

1 எம்.டி.பி நிறுவனத்தின் நிதியில் தாமோ, தமது குடும்ப உறுப்பினர்களோ ஒரு சல்லிக்காசுகூட பெற்றதில்லை என்று மத்திய பொருளகமான மலேசிய தேசிய வங்கி வின் முன்னாள் கவர்னர் தான் ஸ்ரீ ஜெட்டி அக்தாஸ் அஜீஸ் இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு எதிராக நடைபெற்று வரும் 1எம்.டி.பி லஞ்ச ஊழல் வழக்கில் துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அஹ்மத் அக்ரம் கரீப் பின் கேள்விக்கு பதில் அளிக்கையில் 75 வயதான ஜெட்டி மேற்கண்டவாறு பதில் அளித்தார்.

1எம்.டி.பி நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட பணத்தில் மலேசிய தொழில் அதிபர் ஜோ லோ விடமிருந்து ஜெட்டி குடும்பத்தினர் பணம் பெற்றுள்ளனர் என்று இதற்கு முன்பு நஜீப் குற்றஞ்சாட்டியிருந்தார். நஜீப் கூறிய இந்த குற்றச்சாட்டின் உண்மைத் தன்மையை ஆராய்வதற்கு ஜெட்டி யிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் ஒரு சல்லிக்காசுகூட தங்கள் குடும்பத்தினர் பெற்றதில்லை என்றார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!