கோலாலம்பூர், செப்டம்பர்.03
கோலாலம்பூர் அனைத்துலக ச விமான நிலையத்தில் இன்று புதன்கிழமை மதியம் ஒரு ஏரோடிரேன் சேவை , மின்சாரத் தடங்கல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இன்று மதியம் 1.36 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில், அதில் பயணித்த பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
பின்னர் அவர்கள் அனைவரும் அந்த ஏரோடிரேனிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, செயல்பாட்டில் இருந்த மற்ற ஏரோடிரேன் மூலம் செடலிட் டெர்மினலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து கேஎல்ஐஏ நிர்வாகம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்ட பயணிகளுக்காக வருத்தம் தெரிவித்துள்ளது.
மேலும் இத்தகைய இடையூறுகள் ஏற்படும் போதும், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, சேவைகள் வழக்க நிலைக்குத் திரும்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் எப்போதும் தயார் நிலையில் இருப்பதையும் அது சுட்டிக் காட்டியது.








