Dec 2, 2025
Thisaigal NewsYouTube
முன்னாள் பிரதமர் நஜீப்பிற்கு அரச மன்னிப்பு வழங்குவது நல்லது
தற்போதைய செய்திகள்

முன்னாள் பிரதமர் நஜீப்பிற்கு அரச மன்னிப்பு வழங்குவது நல்லது

Share:

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக், சிறைச் சாலையில் தொடர்ந்து தண்டனை அனுபவித்து வருவதைக் காட்டிலும், அவருக்கு அரச மன்னிப்பு வழங்குவது இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் சிறந்த வழிமுறையாகும் என்று சிலாங்கூர் பாஸ் கட்சி தலைவர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.

நஜீப்பின் SRC International லஞ்ச ஊழல் வழக்கிற்குத் தலைமை ஏற்ற நீதிபதி நஸ்லான் கஸாலிபற்றிய சில தகவல்கள் அம்பலமானதைத் தொடர்ந்து, நஜீப்பிற்குப் பொது மன்னிப்பு வழங்குவது ஏற்புடையதே என்று பாஸ் கட்சியின் சுபாங் தொகுதித் தலைவர் சகாருடீன் முகமட் குறிப்பிட்டார்.

நஜீப் சம்பந்தப்பட்ட வழக்கில், நீதிபதி நஸ்லான் தொடர்புடைய நல சார்ந்த அம்சங்கள் இருப்பதாக கூறப்படுவதைத் தொடர்ந்து, நஜீப்பிற்கு எதிரான விசாரணை இஸ்லாத்தின் வழிகாட்டல் முறைக்கு ஏற்ப நடைபெறவில்லை என்பது தெரியவந்துள்ளதாக சகாருடீன் தெரிவித்தார்.

Related News