புத்ராஜெயா, ஜூலை.21-
தனது முன்னாள் ஆய்வியல் உதவியாளர் ஒருவர் தொடுத்துள்ள பாலியல் தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணையை ஒத்தி வைப்பதற்கு புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.
பாலியல் தாக்குதல் தொடர்பாக முன்னாள் உதவியாளர் ஒருவர் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தொடுத்துள்ள சிவில் வழக்கில் அன்வார் முன் வைத்துள்ள அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான 8 கேள்விகளுக்கு கூட்டரசு நீதிமன்றத்தில் விடை காணும் வரையில் உயர் நீதிமன்ற விசாரணை ஒத்தி வைக்கப்பட வேண்டும் என்று மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினருக்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி ருஸிமா கஸாலி தெரிவித்தார்.
உயர் நீதிமன்றத்தின் இந்த சிவில் வழக்கு விசாரணையை ஒத்தி வைப்பதற்கு ஏற்கனவே அப்பீல் நீதிமன்றம் தற்காலிக அனுமதி வழங்கிய போதிலும், கூட்டரசு நீதிமன்றத்தின் முடிவு தெரியும் வரை உயர் நீதிமன்றத்தில் நடைபெறவிருந்து வழக்கு விசாரணை நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்று அப்பீல் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.








