ஜோகூர், ஜாலான் சிம்பாங் ரெங்காங்கில் உள்ள ஜாலான் பத்து 47இல் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த முதியவர் ஒருவரை கனவுந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிர் துறந்தார்.
இன்று நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து தகவல் அளித்த ரெங்காம் தீயணைப்பு - மீட்ப்புப் படை நிலையத்தின் கொமான்டர் ஒபிராசி நோர்ஹுசாம் இவான் தெரிவிக்கயில், தமது தரப்புக்கு இன்று பிற்பகல் 2.57 மணிக்குத் தகவல் கிடைத்ததாகவும் 7 அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் கூறினார்.
பயிர்களுக்கான உரத்தை ஏற்றி வந்த கனவுந்தின் ஓட்டுநருக்கு ஆபத்து ஏதும் ஏற்[அடாத நிலையில், மோட்டார் சைக்கிளோட்டியான அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக நோர்ஹுசாம் இவான் குறிப்பிட்டார்.
அடுத்தக் கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள காவல் துறையிடம் இவ்விவகாரம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் மேலும் சொன்னார்.








