கோலாலம்பூர், ஆகஸ்ட்.21-
அரசாங்க ஊழியர்களின் பணி ஓய்வு பெறும் வயது வரம்பை 65 ஆக உயர்த்துவது குறித்து ஆராயப்படும் என்று பொதுச் சேவை இலாகாவின் தலைமை இயக்குநர் டான் ஶ்ரீ வான் அஹ்மாட் டாஹ்லான் அப்துல் அஸிஸ் தெரிவித்துள்ளார்.
13 ஆவது மலேசியத் திட்டத்தில் ஒரு பகுதியாக இந்த உத்தேசத் திட்டம் உள்ளது. இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துவுடன் இதற்கான ஆய்வு முழு வீச்சில் மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க ஊழியர்களின் பணி ஓய்வு பெறும் வயது வரம்பு கடந்த 2011 ஆம் ஆண்டில் 55 லிருந்து 60 ஆக உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது 65 ஆக உயர்த்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.








