சிரம்பான், ஆகஸ்ட்.18-
மதுபோதையில் காரைச் செலுத்திய நபரால் மோதப்பட்ட போலீஸ்காரர் ஒருவர் மரணமுற்றார். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை ஒரு மணியளில் சிம்பான், தெமியாங் தொடக்கப்பள்ளி அருகில் நிகழ்ந்தது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஜாலான் கேம்ப்பெல் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த 23 வயது போலீஸ்காரர் தலையில் பலத்த காயங்களுக்கு ஆளாகி துவாங்கு ஜாஃபார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் மரணமுற்றதாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ஹாட்டா சே டின் தெரிவித்தார்.
போலீஸ்காரரை மோதித் தள்ளியதாக நம்பப்படும் 26 வயது பெரோடுவா பேஸா காரோட்டி, விசாரணைக்கு ஏதுவாக 6 நாள் தடுத்து வைக்கப்படுவதற்கு நீதிமன்ற அனுமதி பெறப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.








